பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04.09) எதிர்க்கட்சித் தலைவருடன் கைகோர்த்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.