வெல்லம்பிட்டிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

வெல்லம்பிட்டிய சிங்கபுர பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (04.09) பிற்பகல் 119 எனும் பொலிஸ் தகவல் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 முதல் 55 வயது மதிக்கத்தகாவர் எனவும், 05 அடி 03 அங்குல உயரம் கொண்டவர் என்றும், கடைசியாக வெள்ளைக் கோடிட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply