மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த இந்த நிலா நடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இரவில் ஏற்டபட்டதால் தூக்கத்தில் இருந்த பலர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதுடன், தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிகின்றன.
சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கம், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.