ஆசிய கிண்ணம் – இலங்கை எதிர் பங்களாதேஷ் ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 லீக் தொடரின் இரண்டாம் போட்டி இலங்கை, பங்காளதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

மழை பெய்வதற்கான வாய்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மைதானம் சீராக முழுமையாக நல்ல நிலையில் காணப்படுகிறது. கடும் வெப்பம் இன்று காலை முதல் நிலவுகிறது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக மைதானத்தை சூழ காணப்பட்ட கரு முகில் கூட்டங்கள் அகன்று வருகின்றமை மழை வாய்ப்பை குறைவடைய செய்துள்ளது. 2 மணி வாநிலை ஏதிர்வுகூறலின் படி 30 பாகை செல்ஸியஸ் வெப்பமும் 90% மழை வாய்ப்பும் கொழும்பில் உள்ளதாக எதிர்வு கூறப்பப்ட்டுள்ளது.

ஏற்கனவே முதல் சுற்றில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வியடையும் பட்சச்தில் இறுதிப் போட்டி வாய்பை இழக்கும் நிலை உருவாகலாம். ஏற்கனவே சுப்பர் 04 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை அணி சுப்பர் 04 இல் முதற் போட்டியில் இன்று மோதுகிறது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஒரு அணி குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவேண்டும்.

1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 சரித் அசலங்க

1 நைம் ஷேக், 2 மெஹதி ஹசன் மிராஸ், 3 ஷகிப் அல் ஹசன் (தலைவர்), 4 லிட்டன் டாஸ் 5 முஷ்பிகுர் ரஹீம், 6 தௌஹித் ரிதோய், 7 நசும் அஹமட் 8 ஷமீம் ஹொசைன் 9 ஷொரிபுள் இஸ்லாம் 10 ரஸ்கின் அஹமட், 11 ஹசன் மஹ்முட்

Social Share

Leave a Reply