இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் நேற்று (11.09) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
வடக்கு மலுகு, ஜெய்லோலோ நகருக்கு வடகிழக்கே 11 கிலோமீட்டர் (6.8 மைல்) தொலைவில் 168 கிலோமீட்டர் (104 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக ஜெர்மன் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை. அத்துடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.