பணிபுறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள் – ஒருவர் பலி!

ரயில் ஊழியர்கள் நேற்று (11.09) நள்ளிரவில் இருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று குறைந்த அளவிலான ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அந்த ரயில்களில் பெருமளவிலான பயணிகள் பயணித்துள்ளனர்.

குறிப்பாக ரயிலின் மேற்கூரை, கதவின் அருகில் ஏராளமானோர் பயணித்துள்ளனர். இவ்வாறு ஆபத்தான பயணத்தை முன்னெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேரேப் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து பதிவாகியுள்ளதுடன், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Social Share

Leave a Reply