பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

பொலிசாரை போல பாவனை செய்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

பொருட்கள், வாகனங்கள், வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை, சிவில் பொலிஸ் அதிகாரிகள் போல் சோதனை செய்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், CID அல்லது விசேட பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தவிர எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரும் இத்தகைய சோதனைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸாரால் அதிகாரிகளால் சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது, குறித்த பொலிஸ் அதிகாரிகள் குழுவில் ஓரிரு அதிகாரிகள் நிச்சயம் சீருடையில் இருப்பார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தனர்.

அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் வரை இதுபோன்ற சோதனைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply