தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இ்ன்று(13.09) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்தனர். இதன்போதே அவர் மேற்படி உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

Social Share

Leave a Reply