லிபியாவில் வெள்ளம் : கொத்தாக மடிந்த மக்கள்!

லிபியாவின் – டெர்னாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18000-20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என நகர மேயர் அறிவித்துள்ளார். 

முன்னதாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2000இற்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த அனர்த்தம் குறித்து லிபியாவின் மன்னர், அந்நாட்டின் ஜனாதிபதி கவுன்சில் தலைவரான மொஹமட் அல்-மென்ஃபிக்கு. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

குறித்த கடிதத்தில், டேனியல் புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் தானும் தனது மனைவியும் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் நாங்கள் துக்கப்படுகிறோம், மேலும் பயங்கரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை டெர்னாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply