லிபிய கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது 25 பேர் மாத்திரம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நைஜீரியா உள்ளிட்ட ஏனைய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபியாவின் ணுரறயசய நகரிலிருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது