கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு..!

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த வருடம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில் குறித்த பொருட்களின் விலை உயர்வடையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகளுக்கு இதுவரை பெறுமதிசேர் விதிக்கப்படாத நிலையில் குறித்த பொருட்களுக்கான விலை சுமார 18 சதவீதத்தினால் அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply