சீமான் மீதான முறைப்பாட்டை திரும்ப பெற்றார் நடிகை விஜயலக்ஷ்மி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து சீமான் ஏமாற்றிவிட்டதாகவும், 6 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி இந்திய காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதை விசாரிக்கும் முகமாக, நடிகை விஜயலட்சுமியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதோடு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ள பணிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சீமான் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்மாறு காவல்துறையினர் இருமுறை அறிவித்திருந்தபோதும் அவர் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜயலட்சுமி வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்துக்கு வந்து தாம் வழங்கிய முறைப்பாட்டை அறிவித்துள்ளார்.

பின்னர் அவர், ”இந்த வழக்கை மீளப்பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன். யாருடைய வற்புறுத்தலினாலும் இதை செய்யவில்லை, சீமானிடம் பேசினேன் வழக்கை மீள பெற்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

நியாயம் கிடைக்கும் என வழக்கு தொடர்ந்த போதிலும், அது நடக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், என்ன செய்தாலும் தாம் மட்டுமே அசிங்கப்படுவதாகவும், தமிழ் நாட்டில் அவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், அவரை தாண்டி யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் நடிகை விஜயலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply