இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மைதானனங்களை சிறந்த முறையில் பராமரித்து, மழையில் இருந்து காப்பாற்றி போட்டிகளை உடனடியாக நடாத்த கடுமையாக உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்களை ஆசிய கிரிக்கெட் சம்மேளனம், இலங்கை கிரிக்கெட் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெறுமதி இலங்கை நாணய பெறுமதியில் கிட்டத்தட்ட 1 கோடி 65 இலட்சம் ஆகும்.
கொழும்பு மற்றும் கண்டி மைதான பராமரிப்பளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த பணம் வழங்கப்படவுள்ளதாக, ஆசிய கிரிக்கெட் சம்மேளன தலைவர் ஜெய் ஷா இந்த அறிவிப்பை இன்று(17.09) ஆசிய கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் வேளையில் அறிவித்துள்ளார்.
ஆடுகளம் அடங்கலாக மைதானத்தின் முழுப்பகுதியையும் மூடி, பாதுகாத்து வழங்கியமை இந்த ஆசிய கிண்ண தொடரில் மறக்க முடியாது எனவும், அது முக்கியமான பகுதியாக அமைந்ததாகவும் ஜெய் ஷா மேலும் தெரிவித்துளளார்.