ஆசிய விளையாட்டு போட்டி – இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தெரிவாகியுள்ளது.

இன்று(24.09) பாகிஸ்தான் மகளிர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 06 விக்கெட்களினால் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டி வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஷபால் சுல்பிகார் 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் உதேசிக்கா பிரபோதினி 3 விக்கெட்களையும், கவிசா டில்ஹாரி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஹர்ஷிதா சமரவிக்ரம 23 ஓட்டங்களையும், நிலக்சி டி சில்வா ஆட்டமிழக்கமால் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிடையிலான இறுதிப் போட்டி நாளை(25.09) 11.30 இற்கு இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply