04 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்!

இலங்கையில் நான்கு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி  சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேவேளை ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளை கொண்டுள்ள அமைச்சர்களிடம் இருந்து சில அமைச்சுகளை ஏனையோருக்கு வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply