இந்தியா அசுர வெற்றி

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 99 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி அதிரடி நிகழ்த்து 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சுப்மன் கில் தனது ஏழாவது சதத்தை பூர்த்தி செய்து 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்து 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக் கொன்டார். லோகேஷ் ராகுல் 52 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கமரூன் க்ரீன் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

அவுஸ்திரேலியா அணி துடுப்பாடிய வேளையில் மழை பெய்தமையினால் 33 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டு அவுஸ்திரேலியா அணிக்கு 317 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களையும், சீன் அபோட் 54 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி யார் எல்லாம் போர்ம் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தார்களோ அவர்கள் எல்லாம் போர்ம் ஆகி உலகக்கிண்ண தொடருக்கு முன் முழுமையான பலமான அணியாக மாறியுள்ளர்கள். அடுத்த போட்டியில் இந்தியாவின் முழுமையான அணி களமிறங்கவுள்ளது. இரண்டாம் தர அணியே இப்படி என்றால் முதற் தர அணி என ஆச்சரியப்படும் நிலையே ஏற்படுகிறது.

இந்த வெற்றி இந்தியா அணியின் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலில் முதல் இடத்தை உறுதி செய்துள்ளது. உலகக்கிண்ணத்தில் முதலிட அணியாக இந்தியா அணி களமிறங்கவுள்ளது. இந்த வெற்றி அவர்களை உலகக்கிண்ண சம்பியனாக முதல் வாய்ப்புகள் இலகுவாக வழங்க வழி செய்துள்ளது.

Social Share

Leave a Reply