பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் புதிய திட்டம்!

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் எனவும்,
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் மாணவர்களுக்கு தேவையற்ற உணவுகள் வழங்கப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை தடுக்க முழுமையான முறைமை ஒன்று தேவை என்பதை உணர்ந்து பல புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் உணவுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறை சுற்றறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல்களை மீறி செயற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply