பதுளை – மாப்பாகலை பகுதியில் குடியிருப்பு தொகுதியில் நேற்று (25.09) ஏற்பட்ட தீ விபத்தில் 08 வீடுகள் எறிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.