2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான திகதிகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்புக்கான திகதிகள் வெளியாகியுள்ளன. ஒக்டோபர் இரண்டாம் வாரம் வரவு செலவு திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நிதியமைச்சரான ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தப்படவுள்ளதாக நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பாரளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று 21 ஆம் திகதி மதியம் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

மூன்றாவது வாக்களிப்பு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சபாநாயகரின் அனுமதியின் பின்னர் டிசம்பர் 27 ஆம் திகதி வரவு செலவு திட்டம் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் புதிய வரவு செலவு திட்டம் நடைமுறைக்கு வரும்.

இந்த வரவு செலவு திட்டத்தில் சுகாதர, கல்வி, சமூக நல செலவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துளளார். 65 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட சமூக நல செலவு 185 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துளளார்.

Social Share

Leave a Reply