அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்தை வழங்குவதற்கு பதிலாக இலத்திரனியல் முறையில் பில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 ஒழுங்குமுறை பிரதேசங்களில் இந்த முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார்.