இந்தியாவில் நிபா பரவல் காணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் தன்மைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ததன் பின்னர், கேரளாவில் சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.

தொடர் விடுமுறையில் இருந்த பாடசாலைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் அக்டொபர் 26ம் திகதி வரை நீடிக்கும் என்றும், பொது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply