நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் : விவாதம் நடத்த தீர்மானம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 6ஆம் திகதி விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.  

எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையின் பிரகாரம், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Social Share

Leave a Reply