தனுஷ்க குணதிலகவுக்கு விடுதலை! – Updated

பாலியல் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு 20-20 உலகக் கிண்ண தொடருக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருந்த நிலையில் முதற் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்துள்ளார், சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள அவரது வீட்டிற்குத் சென்ற கிரிக்கெட் வீரர் தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அதற்கமைய, கடந்த 2022 நவம்பர் 6ம் திகதி தனுஷ்க கைது செய்யப்பட்டார். 12 நாட்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் பயணத்தடை விதிக்கப்பட்டது.

தனது அனுமதியின்றி உடலுறவு கொள்ளப்பட்டது. உடலுறவின் போது ஆணுறை அகரற்றப்பட்டது. தன்னை தாக்கி ஆவேசமாக நடந்து கொண்டார் ஆகிய குற்றச் சாட்டுகள் அவர் மீது முன் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையட இலங்கை கிரிக்கெட்டினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிறைவடைந்து தனுஷ்க விடுதலையான நிலையில் மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு திரும்பியதும் இலங்கை கிரிக்கெட்டினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை மூன்று நாட்கள் நடைபெற்றது.

வழக்கில் இடம்பெற்ற முக்கிய விடயங்களின் சாராம்சம் கீழே

தனுஷ்க தன்னை ஆவேசமாக முத்தமிட்டதாகவும், படகில் வீடு நோக்கி செல்லும் போது பிட்டத்தில் அடித்ததாகவும், வீட்டுக்கு சென்றதன் பின்னர் தன்னை ஆவேசமாக தாக்க மறைந்திருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். இருப்பினும் நீதிமன்ற குறுக்கு விசாரணைகளின் போது தனது அறைக்கு சென்று, மெழுகுவர்த்தியை ஏற்றி ஒரு மன நிலையை உருவாக்குவோம் என தானே கூறியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

உடலுறவு கொள்ளும் போது அந்த பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக தனுஷ்கவின் நடவடிக்கைகள் மாறியதாகவும், அவரின் விருப்பத்துக்கு மாறாக ஆணுறையை கழற்றியதாகவும் அரச சார் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய போது அதனை நிரூபிக்க முடியுமா என தனுஷ்கவின் வழக்கறிஞர் முருகன் தங்கராஜா கேட்ட போது அரசசார் வழக்கறிஞர் பதிலின்றி நின்றார்.

“அவர் ஆணுறையை கழட்டியதனை தான் அறியவில்லை, அவ்வாறு உணர்ந்ததேன்” என அந்த பெண் கூறியுள்ளார். பொலிஸ் விசாரணையில் தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆணுறை இன்றி தனது ஆணுறுப்பை பெண்ணின் உறுப்புகள் செலுத்தவிவில்லை என தனுஷ்க கூறியுள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவிடம் பொலிஸ் விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை முழுமையாக பார்த்ததில் அவர் விசாரணைகளுக்கு உண்மையாக நடந்துள்ளார் எனவும், ஆதரவு வழங்கியுள்ளார் எனவும் தான் திருப்தி கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

Social Share

Leave a Reply