இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில், நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி பாணடுகம பிரதேசத்தில் இருந்து நில்வலா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நில்வலா ஆற்றின் நீர் மட்டம் கவனமெடுக்க வேண்டிய மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாகவும். , அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் கவனிக்க வேண்டிய மட்டத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.