பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கத்தின் சமீபத்திய அறிக்கையை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று (27.09) வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தில் 4% ஆக இருந்த பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 1.3% ஆக குறைந்துள்ளது.

உணவு வகையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில்  மைனஸ் 4.8 சதவீதமாக பதிவாகிய நிலையில், செப்டம்பர் மாதத்தில்,  மைனஸ் 5.2 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 8.7% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 4.7% ஆக குறைந்துள்ளது.

Social Share

Leave a Reply