2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னரே திட்டமிடப்பட்டிருந்தபடி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தன. எனினும், தற்போது பிற்போடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்ததுடன், பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரீட்சைகள் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளன.