தர நிர்ணய முத்திரையை தவறாக பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் விற்பனை!

நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் நேற்று (27.09) பிலியந்தலை பொகுந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தேங்காய் எண்ணெய் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையத்தில், தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தரமான இலச்சினையை முறைகேடாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால், போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு மாத்திரமே என உரிய இலச்சினை வழங்கப்பட்டு காலாவதி திகதி குறிப்பிடப்பட்டு வெளியிடப்படுவதுன், இந்தக் கடையில் அவ்வாறு நடைபெறாமையினால் ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் பரிசோதிக்கப்பட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கு வந்த அதிகாரிகள், இந்த தேங்காய் எண்ணெயின் தரத்தில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் பணியும் கடையின் ஊழியர் ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட நிலையான இலச்சினைகளைப் பயன்படுத்தி அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பலகைகளை அகற்றுவதற்கு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததுடன், 19 லீற்றர் தேங்காய் எண்ணெயை கைப்பற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply