தடுமாறி மீண்டு வென்ற இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் போட்டியில் இந்தியா அணி 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

200 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்தியா அணி 2 ஓட்டங்களில் 3 விக்கெட்களை இழந்தது. இந்தியாவின் கதை அவ்வளவுதான் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த விராத் கோலி. லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்தியா அணியினை மீட்டு எடுத்தனர். வெற்றி வாய்ப்பை இந்தியா அணிக்கு ஏற்படுத்திய நிலையில் 165 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. முன்னதாக நடுவே விராத் கோலியின் இலகுவான பிடி ஒன்றை மிற்செல் மார்ஷ் நழுவவிட்டார். இந்த பிடி அவுஸ்திரேலியா அணியின் வாய்ப்பை முழுமையாக இல்லாமலால் செய்தது.

இறுதிவரை போராடி அணிக்கான வெற்றியினை லோகேஷ் ராகுல் உறுதி செய்தார்.

அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தும் வகையில் பந்துவீசவில்லை. அடம் ஷம்பாவின் பந்து வீச்சை இலகுவாக இந்தியா துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொண்டனர். மக்ஸ்வெல் ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக பந்துவீசினார். ஆனாலும் விக்கெட்களை தகர்க்கக்கூடிய வகையில் அது அமையவில்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு அவுஸ்திரேலியா அணியை 49.3 ஓவர்களில் சகல விக்கெட் இழப்பிற்கு 199 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்தினர்.

இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு மூலம் ஆரம்பம் முதலே அவுஸ்திரேலியா அணி தடுமாறி வந்தது. முதல் ஓவரிலேயே பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித் நல்ல இணைப்பட்டாம் ஒன்றை ஏற்படுத்தி அணியினை மீட்டனர். 69 ஓட்டங்களாக இணைப்பாட்டம் இருக்க வோர்னர் ஆட்டமிழந்தார். இந்தியாவின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இறுக்கமாக ஓட்டங்களை வழங்காமல் பந்து வீச அவுஸ்திரேலியா அணி மீது அழுத்தம் அதிகரித்தது.

மார்னஸ் லபுஷேன், ஸ்மித் ஆகியோர் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப அதனை முறியடித்த ஜடேஜா சிறிய இடைவெளிகளில் மூன்று விக்கெட்களை கைப்பற்றி அவுஸ்திரேலியா அணியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இறுதி நேரத்தில் மிற்செல் ஸ்டார்க் பெற்றுக் கொடுத்த ஓட்டங்களை அவுஸ்திரேலியா அணிக்கு மொத்த ஓட்ட எண்ணிக்கை உயர்வடைய காரணமாக அமைந்தது.

அஷ்வினும் தனது பங்கிற்கு விக்கெட்டினை கைப்பற்றிக்கொடுத்தார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ஒட்டுமொத்த இந்தியாவின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தினர். அவுஸ்திரேலியா அணி உலகக்கிண்ண தொடரில் மிக மோசமாக விளையாடிய போட்டிகளில் இதனை ஒன்றாக கருதலாம்.

அவுஸ்திரேலியா அணி போராடும். இந்தியா அணிக்கு கடும் சவால் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு நடைபெறவில்லை.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதக தன்மை கொண்ட மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது. அத்தோடு ஓட்டங்கள் அதிகமாக குவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி மிகவும் விறு விறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தற்போது இல்லாமல் போயுள்ளதாக நம்ப தோன்றுகிறது.

அவுஸ்திரேலியா அணி இலகுவாக விட்டுக்கொடுக்காது. கடுமையாக போராடும் என நம்பலாம்.

அணி விபரம்

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) , டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்னஸ் லபுஷேன் , மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், கமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷன் கிஷன்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோஹித் ஷர்மாL.B.Wஜோஸ் ஹெஸல்வூட்000600
இஷன் கிஷன்பிடி – கமரூன் க்ரீன்மிட்செல் ஸ்டார்க்000100
விராத் கோலிபிடி – மார்னஸ் லபுஷேன்ஜோஸ் ஹெஸல்வூட்8511660
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி – டேவிட் வோர்னர்ஜோஸ் ஹெஸல்வூட்000300
லோகேஷ் ராகுல்  9711583
ஹார்டிக் பாண்ட்யா 110801
       
       
       
       
       
உதிரிகள்  12   
ஓவர்  41.2விக்கெட்  04மொத்தம்201   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்08003101
ஜோஸ் ஹெஸல்வூட்09013803
பட் கம்மின்ஸ்6.2002700
க்ளன் மக்ஸ்வெல்08003300
கமரூன் க்ரீன்02001100
அடம் ஷம்பா08005300
     

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டேவிட் வோர்னர்பிடி – குல்தீப் யாதவ்குல்தீப் யாதவ்415260
மிற்செல் மார்ஷ்பிடி – விராத் கோலிஜஸ்பிரிட் பும்ரா000600
ஸ்டீபன் ஸ்மித்Bowledரவீந்தர் ஜடேஜா467120
மார்னஸ் லபுஷேன்பிடி – லோகேஷ் ராகுல்ரவீந்தர் ஜடேஜா274110
க்ளன் மக்ஸ்வெல்Bowledரவீந்தர் ஜடேஜா152510
அலெக்ஸ் கேரிL.B.Wரவீந்தர் ஜடேஜா000200
கமரூன் க்ரீன்பிடி – ஹார்டிக் பாண்ட்யாரவிச்சந்திரன் அஷ்வின்082000
பட் கம்மின்ஸ்பிடி – ஷ்ரேயாஸ் ஐயர்ஜஸ்பிரிட் பும்ரா152411
மிட்செல் ஸ்டார்க்பிடி – ஷ்ரேயாஸ் ஐயர்மொஹமட் சிராஜ்283521
அடம் ஷம்பாபிடி – விராத் கோலிஹார்டிக் பாண்ட்யா062000
ஜோஸ் ஹெஸல்வூட்      
உதிரிகள்      
ஓவர்  49.3விக்கெட்  10மொத்தம்199   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா10003502
மொஹமட் சிராஜ்6.3012601
ஹார்டிக் பாண்ட்யா03002801
ரவிச்சந்திரன் அஷ்வின்10013401
குல்தீப் யாதவ்10004202
ரவீந்தர் ஜடேஜா10022803

Social Share

Leave a Reply