கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் இன்று (09.10) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களிளும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.