வெல்லம்பிட்டி பகுதியில் இன்று(09.10) மாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.