
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் எட்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி உலகக்கிண்ண தொடரில் துரதியடிக்கப்பட்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையுடன் இலங்கை அணியை வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்து அணி இங்கிலாந்து அணிக்கெதிராக 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் 329 ஓட்டங்களை துரதியடித்தமையே ஏற்கனவே சாதனையாக காணப்பட்டது.
இன்று(10.10) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 345 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி ஆரம்ப விக்கெட்கள் இரண்டை வேகமாக இழந்து தடுமாறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அப்துல்லா ஷபீக், மொஹமட் ரிஷ்வான் இணைந்து 176 ஓட்டங்களை பெற்று தமது பக்கமாக வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்கள். மதீஷ பத்திரன இணைப்பாட்டத்தை முறியடித்தார். ஆனாலும் தொடர்ந்தும் அழுத்தம் வழங்காமல் ஓட்டங்களை வழங்கினார். அப்துல்லா ஷபீக் தனது முதல் சதத்தை ஐந்தாவது போட்டியில் பெற்றுக் கொண்டார்.
ஷபிக் ஆட்டமிழந்த பின்னர் மொஹமட் ரிஷ்வான் உபாதைகளுக்கு மத்தியில் போராடினார். மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். வலிகளுக்கு மத்தியில் பெறப்பட்ட இந்தசதம் முக்கியமானதாக அமைந்தது. அவரோடு ஷோட் ஷகீல் இணைப்பாட்டத்தை வழங்க ஓட்ட எண்ணிக்கையை துரத்துவது இலகுவானதாக அமைந்தது.
டில்ஷான் மதுசங்க ஆரம்ப விக்கெட்களை தகர்த்துக் கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி பெற தவறிய ஓட்டங்கள் அவர்களுக்கு பின்னடைவை வழங்கியது. இறுதி 20 ஓவரில் இலங்கை அணி 115 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இன்னமும் 50 ஓட்டங்களாவது அதிகமாக பெற்றிருக்க வேண்டும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குஷல் மென்டிஸ், மற்றும் சதீர சமரவிக்ரம் ஆகியோரின் அபார சதங்கள் மூலமாக வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது. 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக குஷல் மென்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் 102 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். குஷல் மென்டிஸ் வேகமாக தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். சதீர சமரவிக்ரம தனது ,முதற் சதத்தை பெற்றுக் கொண்டார்.
சதீர, மென்டிஸ் ஆகியோர் மூன்றாவது விக்கெட் இணைப்பட்டமாக 111 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டங்கள் அணிக்கு பலமாக அமைந்தன. இலங்கை அணி இன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழப்பதனை இன்றும் செய்தது. இதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கை குறைந்து போனது.
பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி சிறப்பாக பந்துவீசி 04 விக்கெட்களை கைப்பற்றினார். சகல பந்துவீச்சாளர்களும் ஓட்டங்களை வழங்கினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணி எட்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபீக் | பிடி – துஷான் ஹெமந்த | மதீஷ பத்திரன | 113 | 103 | 10 | 3 |
| இமாம் உல் ஹக் | பிடி – குசல் பெரேரா | டில்ஷான் மதுஷங்க | 12 | 12 | 1 | 0 |
| பபர் அசாம் | பிடி – சதீர சமரவிக்ரம | டில்ஷான் மதுஷங்க | 10 | 15 | 1 | 0 |
| மொஹமட் ரிஸ்வான் | 131 | 121 | 8 | 3 | ||
| சவுத் ஷகீல் | பிடி – டுனித் வெல்லாளகே | மஹீஸ் தீக்ஷண | 31 | 30 | 2 | 0 |
| இப்திகார் அகமட் | 22 | 10 | 4 | 0 | ||
| மொஹமட் நவாஸ் | ||||||
| ஷதாப் கான் | ||||||
| ஹசன் அலி | ||||||
| ஷஹீன் அப்ரிடி. | ||||||
| ஹரிஸ் ரவூப் | ||||||
| உதிரிகள் | 26 | |||||
| ஓவர் 48.2 | விக்கெட் 04 | மொத்தம் | 345 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| மஹீஸ் தீக்ஷண | 10 | 00 | 59 | 01 |
| டில்ஷான் மதுஷங்க | 9.2 | 00 | 60 | 02 |
| தசுன் சாணக | 05 | 00 | 28 | 00 |
| மதீஷ பத்திரன | 09 | 00 | 90 | 01 |
| டுனித் வெல்லாளகே | 10 | 00 | 62 | 00 |
| தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 36 | 00 |
| சரித் அசலங்க | 01 | 00 | 10 | 0 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- ஆஷாட் ஷபீக் | ஷதாப் கான் | 51 | 61 | 7 | 1 |
| குசல் பெரேரா | பிடி- முகமட் ரிஸ்வான் | ஹசன் அலி | 00 | 04 | 0 | 0 |
| குஷல் மென்டிஸ் | பிடி- முகமட் ரிஸ்வான் | ஹசன் அலி | 122 | 77 | 14 | 6 |
| சதீர சமரவிக்ரம | பிடி- முகமட் ரிஸ்வான் | ஹசன் அலி | 108 | 89 | 11 | 2 |
| சரித் அசலங்க | பிடி- | ஹசன் அலி | 01 | 03 | 0 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி- ஷஹீன் அப்ரிடி | மொஹமட் நவாஸ் | 25 | 34 | 3 | 0 |
| தசுன் சாணக | பிடி- பபர் அசாம் | ஷஹீன் அப்ரிடி | 12 | 18 | 0 | 0 |
| டுனித் வெல்லாளகே | ஹரிஸ் ரவூப் | 10 | 08 | 1 | 0 | |
| மஹீஸ் தீக்ஷண | Bowled | ஹரிஸ் ரவூப் | 00 | 01 | 0 | 0 |
| மதீஷ பத்திரன | ||||||
| டில்ஷான் மதுஷங்க | ||||||
| உதிரிகள் | 20 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 09 | மொத்தம் | 344 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஷஹீன் அப்ரிடி | 09 | 00 | 66 | 01 |
| ஹசன் அலி | 10 | 00 | 71 | 04 |
| மொஹமட் நவாஸ் | 09 | 00 | 62 | 01 |
| ஹரிஸ் ரவூப் | 10 | 00 | 64 | 02 |
| ஷதாப் கான் | 08 | 00 | 55 | 01 |
| இப்திகார் அகமட் | 04 | 00 | 22 | 00 |
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| நியூசிலாந்து | 02 | 02 | 00 | 00 | 04 | 1.958 |
| பாகிஸ்தான் | 02 | 02 | 00 | 00 | 04 | 0.927 |
| தென்னாபிரிக்கா | 01 | 01 | 00 | 00 | 02 | 2.040 |
| இந்தியா | 01 | 01 | 00 | 00 | 02 | 0.883 |
| இங்கிலாந்து | 01 | 01 | 00 | 00 | 02 | 0.553 |
| பங்களாதேஷ் | 01 | 00 | 01 | 00 | 02 | -0.653 |
| அவுஸ்திரேலியா | 01 | 00 | 01 | 00 | 00 | -0.883 |
| இலங்கை | 02 | 00 | 02 | 00 | 00 | -1.161 |
| ஆப்கானிஸ்தான் | 02 | 00 | 01 | 00 | 00 | -1.438 |
| நெதர்லாந்து | 01 | 00 | 01 | 00 | 00 | -1.800 |