இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (10.10) பிற்பகல் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கருடன், வெளிவிவகார அமைச்சின் மூன்று உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
முக்கிய பல விடையங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம்.