மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பொலிஸ் பலி!

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல தலகிரியாகம ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் டிப்பர் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயதுடைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விடுமுறையில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply