இன்று (12.10) அதிகாலை மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய, பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மீட்டியாகொடையில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான குறித்த சந்தேக நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.