தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பத்தாவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி கத்தடுப்பை தெரிவு செய்தது. தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் பெற்றுக் கொடுத்த சதம் மூலம் 300 ஓட்டங்களை தாண்டியுள்ளது. ஆரம்பம் முதலே நல்ல முறையில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறக்கூடிய நிலை பெற்றுள்ளது.
ரெம்பா பவுமா, குயின்டன் டி கொக் ஜோடி சத இணைப்பாட்டத்தை பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியான சராசரியான இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டன. எய்டன் மார்க்ராம் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
கிளென் மக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். அவுஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க் ஓட்டங்களை அதிகம் வழங்கமால் இறுக்கமாக பந்துவீசிய’போதும் ஆரம்ப விக்கெட்களை தகர்க்க முடியாமல் போனது.
அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பில் சிறந்த அணி. ஆனாலும் இன்று நான்கு பிடிகளை தவறவிட்டது அவர்களுக்கு பின்னடைவை வழங்கியுள்ளது.
இரண்டு அணிகளும் தங்களது இரண்டாவது போட்டியில் விளையாடுகின்றன. தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியுடன் சாதனையுடனான வெற்றியினை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலியா அணி இந்தியா அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கு இன்று வெற்றி முக்கியம். இருப்பினும் வெற்றி பெறுவது இலகுவானதல்ல.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குயின்டன் டி கொக் | Bowled | க்ளன் மக்ஸ்வெல் | 109 | 106 | 8 | 5 |
| ரெம்பா பவுமா | பிடி – டேவிட் வோர்னர் | க்ளன் மக்ஸ்வெல் | 35 | 55 | 5 | 0 |
| ரஷி வன் டேர் டுசென் | பிடி – சீன் அபோட் | அடம் ஷம்பா | 26 | 30 | 2 | 0 |
| எய்டன் மார்க்ரம் | பிடி – ஜோஸ் ஹெஸல்வூட் | பட் கம்மின்ஸ் | 56 | 44 | 7 | 1 |
| ஹெய்ன்ரிச் கிளாசன் | பிடி – ஜோஸ் இங்கிலிஸ் | ஜோஸ் ஹெஸல்வூட் | 29 | 27 | 3 | 0 |
| டேவிட் மில்லர் | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 17 | 13 | 1 | 1 |
| மார்கோ ஜன்சன் | பிடி – டேவிட் வோர்னர் | மிட்செல் ஸ்டார்க் | 26 | 22 | 3 | 1 |
| ககிசோ ரபாடா | 00 | 01 | 0 | 0 | ||
| கேசவ் மகராஜ் | 00 | 02 | 0 | 0 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 07 | மொத்தம் | 311 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| மிட்செல் ஸ்டார்க் | 09 | 01 | 53 | 02 |
| ஜோஸ் ஹெஸல்வூட் | 09 | 00 | 60 | 01 |
| க்ளன் மக்ஸ்வெல் | 10 | 01 | 34 | 02 |
| பட் கம்மின்ஸ் | 09 | 00 | 71 | 01 |
| அடம் ஷம்பா | 10 | 00 | 70 | 01 |
| மிற்செல் மார்ஷ் | 01 | 00 | 06 | 00 |
| மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ் | 02 | 00 | 11 | 00 |