நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சையைத் தொடர்ந்து உடனடியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத்தாள் சமூக ஊடக தளங்களில் பரவி வருவது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15.10) நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன், இவ்வருடம் மொத்தம் 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.