பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த கோட்டே மாநகர சபையின் ஊழியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரிடம் இருந்து 06 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராஜகிரியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.