கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய அவரது சகோதரர் கிருலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
மேலும், தனது தாயாரை பணத்திற்காக தொந்தரவு செய்தபோது அவரது சகோதரன் மார்பில் கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் சகோதரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.