பல நாடுகளிலும் ஹமாஸ் – இஸ்ரேயல் போரின் எதிரொளி!

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையிலான தாக்குதல் சம்பவங்கள் உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (14.10) அமெரிக்காவில் 71 வயது முதியவர் ஒருவர் 6 வயதுடைய பலஸ்தீன பூர்வீகம் கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் குழந்தையை கூரிய ஆயுதத்தால் அடித்து கொன்றுள்ளார்.

தாக்கப்பட்ட குழந்தையின் தாயும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைக்கு 26 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், தாய் 12 முறைக்கு மேல் குத்தப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply