ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு!

கமத்தொழில் அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் வதிவிடங்களை அண்டிய பகுதிகளில் ஆடு வளர்க்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட எட்டு குடும்பங்களுக்கு ஆடுகள் நேற்று(16.10) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பயனாளி ஒருவருக்கு மூன்று ஆடுகள் வீதம் 24 ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 33 பயனாளிகளும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 12 பயனாளிகளும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 10 பயனாளிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 8 பயனாளிகளுமாக 63 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், இத் திட்டத்திற்காக பயனாளி ஒருவருக்கு 75,000.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply