கிளிநொச்சி மாவட்டத்திற்கு மகளிர் விவகார அமைச்சினால் அவசர பொதிகள் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உடனடி உதவிக்கான அவசர பொதி உதவி நேற்று(18.10) புதன்கிழமை கையளிக்கப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த உடனடி உதவிக்கான அவசர பொதிகள் வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


இதன்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 10 உடனடி உதவிக்கான அவசர பொதிகளும், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு 50 உடனடி உதவிக்கான அவசர பொதிகளும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், மேலதிக அரசாங்க அதிபர் சு.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவு வைத்திய அதிகாரி Dr. ஜெயராஜா, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சு.ஜெயனந்தராசா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.உதயனி, அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply