இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (19.10) உலககிண்ணத்தொடரின் 17 ஆவது போட்டி பூனேயில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
ஷகிப் அல் ஹசன் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளும் தலா 04 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 3 வெற்றிகளையும், பங்களாதேஷ் அணி 1 வெற்றியினையும் பெற்றுள்ளன.
இந்தியா அணி இன்று வெற்றி பெற்றால் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுகிறது.
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர்
பங்காளதேஷ் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(தலைவர்), லிட்டொன் டாஸ், ஹசன் மஹ்முட் , ரன்ஷித் ஹசன், , தௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, நசும் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்
புள்ளிப்பட்டியல்
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
நியூசிலாந்து | 04 | 04 | 00 | 00 | 08 | 1.923 |
இந்தியா | 03 | 03 | 00 | 00 | 06 | 1.841 |
தென்னாபிரிக்கா | 03 | 02 | 01 | 00 | 04 | 1.385 |
பாகிஸ்தான் | 03 | 02 | 01 | 00 | 04 | -0.137 |
இங்கிலாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.084 |
பங்களாதேஷ் | 03 | 01 | 02 | 00 | 02 | -0.699 |
அவுஸ்திரேலியா | 03 | 01 | 02 | 00 | 02 | -0.734 |
நெதர்லாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.993 |
ஆப்கானிஸ்தான் | 04 | 01 | 03 | 00 | 02 | -1.250 |
இலங்கை | 03 | 00 | 03 | 00 | 00 | -1.532 |