இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பூனேயில் இன்று (19.10) நடைபெற்ற உலககிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டியில் இந்தியா அணி மீண்டும் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.
257 ஓட்டங்கள் என்ற வெற்றிலைக்கை மூன்று விக்கெட்களை மட்டும் இழந்து 41.3 ஓவர்களில் இலகுவாக துரத்தியடித்து இந்தியா அணி வெற்றி பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் வேகமாக 88 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றனர். ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பின்னர் கில், கோலி ஆகியோர் வேகமாக ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். கோலி களமிறங்க முறையற்ற பந்துகளும் அவருக்கு வீச அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். கில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த வேளையில் ஆட்டமிழந்தார். கோலி சிறப்பாக துடுப்பாடி அபாரமான சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 48 ஆவது சதமாகும். வெற்றிக்கும் தனது சதத்துக்கும் ஒரேயளவான ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தனித்து அடுத்து சதத்தை பூர்த்தி செய்து வெற்றியையும் அணிக்கும் வழங்கினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், அதனை தொடர முடியவில்லை. இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தினர். பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் லிட்டோன் டாஸ், ரன்ஷித் ஹசன் ஆகியோர் 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக 14.4 ஓவர்களில் பகிர்ந்தனர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். முதல் விக்கெட் வீழ்ந்ததும் தொடர்ச்சியாக சம இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் போனது. இறுதி நேரத்தில் மஹமதுல்லா பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் பங்களாதேஷ் அணி ஓரளவுக்கு போராடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது. இருப்பினும் இந்தியாவின் பலமான துடுப்பாட்ட வரிசை இந்த ஓட்ட எண்ணிக்கையினை இலகுவாக துரத்தியடித்தது.
இந்தியா அணியின் பந்துவீச்சில் சகலரும் சிறப்பாக இறுக்கமாக பந்துவீசினார்கள். ஹார்டிக் பாண்ட்யா உபாதை காரணமாக பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது.
ஷகிப் அல் ஹசன் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை.துடுப்பாட்டம் பந்துவீச்சு என இருபக்கமும் பங்களாதேஷ் அணிக்கு இது பின்னடைவே. அவருக்கு பதிலாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளும் தலா 04 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி 1 வெற்றியினையும் 3 தோல்விகளையும் பெற்றுள்ளது.
இந்தியா அணி இன்று வெற்றி பெற்று இரண்டாமிடத்தை தக்க வைத்துள்ளது. பங்களாதேஷ் அணி ஏழாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரோஹித் ஷர்மா | பிடி – தௌஹித் ரிடோய் | ஹசன் மஹ்முட் | 48 | 40 | 7 | 2 |
சுப்மன் கில் | பிடி – மஹ்மதுல்லா | மெஹிதி ஹசன் மிராஸ் | 53 | 55 | 5 | 2 |
விராத் கோலி | 103 | 97 | 6 | 4 | ||
ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி – மஹ்மதுல்லா | மெஹிதி ஹசன் மிராஸ் | 19 | 25 | 2 | 0 |
லோகேஷ் ராகுல் | 34 | 34 | 3 | 1 | ||
உதிரிகள் | 04 | |||||
ஓவர் 41.3 | விக்கெட் 03 | மொத்தம் | 261 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷொரிபுல் இஸ்லாம் | 08 | 00 | 54 | 00 |
முஸ்ரபைசூர் ரஹ்மான் | 05 | 00 | 29 | 00 |
நசும் அஹமட் | 9.3 | 00 | 60 | 00 |
ஹசன் மஹ்முட் | 08 | 00 | 65 | 01 |
மெஹிதி ஹசன் மிராஸ் | 10 | 00 | 47 | 02 |
மஹ்மதுல்லா | 01 | 00 | 06 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரன்ஷித் ஹசன் தமீம் | L.B.W | குல்தீப் யாதவ் | 51 | 43 | 5 | 3 |
லிட்டொன் டாஸ் | பிடி- சுப்மன் கில் | ரவீந்தர் ஜடேஜா | 66 | 82 | 7 | 0 |
நஜ்முல் ஹொசைன் சாண்டோ | L.B.W | ரவீந்தர் ஜடேஜா | 08 | 17 | 0 | 0 |
மெஹிதி ஹசன் மிராஸ் | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் சிராஜ் | 03 | 13 | 0 | 0 |
தௌஹித் ரிடோய் | பிடி- சுப்மன் கில் | ஷர்டூல் தாகூர் | 16 | 35 | 0 | 0 |
முஷ்பிகுர் ரஹீம் | பிடி- ரவீந்தர் ஜடேஜா | ஜஸ்பிரிட் பும்ரா | 38 | 46 | 1 | 1 |
மஹ்மதுல்லா | Bowled | ஜஸ்பிரிட் பும்ரா | 46 | 36 | 3 | 3 |
நசும் அஹமட் | பிடி- லோகேஷ் ராகுல் | மொஹமட் சிராஜ் | 14 | 18 | 2 | 0 |
முஸ்ரபைசூர் ரஹ்மான் | 01 | 07 | 0 | 0 | ||
ஷொரிஃபுல் இஸ்லாம் | 07 | 03 | 0 | 1 | ||
உதிரிகள் | 06 | |||||
ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 256 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஜஸ்பிரிட் பும்ரா | 10 | 01 | 41 | 02 |
மொஹமட் சிராஜ் | 10 | 00 | 60 | 02 |
ஹார்டிக் பாண்ட்யா | 0.3 | 00 | 08 | 00 |
விராத் கோலி | 0.3 | 00 | 02 | 00 |
ஷர்டூல் தாகூர் | 09 | 00 | 59 | 01 |
குல்தீப் யாதவ் | 10 | 00 | 47 | 01 |
ரவீந்தர் ஜடேஜா | 10 | 00 | 38 | 02 |
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
நியூசிலாந்து | 04 | 04 | 00 | 00 | 08 | 1.923 |
இந்தியா | 03 | 03 | 00 | 00 | 06 | 1.659 |
தென்னாபிரிக்கா | 03 | 02 | 01 | 00 | 04 | 1.385 |
பாகிஸ்தான் | 03 | 02 | 01 | 00 | 04 | -0.137 |
இங்கிலாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.084 |
அவுஸ்திரேலியா | 03 | 01 | 02 | 00 | 02 | -0.734 |
பங்களாதேஷ் | 04 | 01 | 03 | 00 | 02 | -0.784 |
நெதர்லாந்து | 03 | 01 | 02 | 00 | 02 | -0.993 |
ஆப்கானிஸ்தான் | 04 | 01 | 03 | 00 | 02 | -1.250 |
இலங்கை | 03 | 00 | 03 | 00 | 00 | -1.532 |