புதிய அதிபர்கள் நியமனம் விரைவில். ஆசிரியர் சம்பள உயர்வுமுண்டு.

புதிய அதிபர்கள் 5000 பேருக்கான நியமன வரும் மாதம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அத்தோடு 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தினூடாக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என தான் நம்புவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றுவித தரத்திலுமுள்ள அதிபர்களுக்குமான நியமனம் வழங்கப்படுவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். நவம்பர் மாதம் 04 ஆம் திகதி இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரவிந்தகுமார் கூறியுளளார்.

Social Share

Leave a Reply