பல நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, தெனியாய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (23.10) பாதுகாப்பு கருதி பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய கல்விப் பணிப்பாளர் தம்மிகா பிரியதர்ஷனி தெரிவித்துள்ளார்.
மோசமான காலநிலை காரணமாக அப்பகுதியில் உள்ள (77) பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
இன்று காலை இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளை பாதுகாப்பாக தங்க வைக்குமாறும், அல்லது அவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்புமாறும் குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.