காஸா பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன.
போர் உயிர் இழப்புகளையும் அழிவையும் மட்டுமே ஏற்படுத்துகிறது என்றும், அதனால் கிடைக்கும் எந்த வெற்றியும் பயனற்றது என்றும் திருத்தந்தை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் படைகள் ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரையில் 6000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.