வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பெண் விமானத்தில் மரணம்!

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர் மொரட்டுவ, கோரல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய திருமணமாகாத பெண் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இன்று (23.10) கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தே விமானத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Social Share

Leave a Reply