ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் இருந்த இரண்டு இஸ்ரேலிய பெண்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் வைத்திருந்த வயதான பெண்மணிகள் இருவரை இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 200 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.