முல்லைத்தீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு, முல்லைத்தீவு,மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள முல்லை மணிமண்டபத்திலே, எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இப்புத்தகக் கண்காட்சியில் அனைத்து வயதுப் பிரிவிற்கும் ஏற்ற பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. எனவே பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரையும் இக்கண்காட்சியில் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துளளார்.
.
இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் சுமார் 50 பாடசாலை நூலகங்களிற்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடுகளின் ஒரு தொகுதி நூல்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தகக் கண்காட்சி

Social Share

Leave a Reply