நேற்று (24.10) இரவு முதல் இன்று (25.10) வரை காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீன சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தத் ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளுக்குள் நிகழ்ந்த அதிக பலி எண்ணிக்கை இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனும் அச்சம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.